டெல்லி அருகே காசியாபாத்தில் 10 வகுப்பு மாணவி காரில் கடத்தப்பட்டு 3 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு டியூசன் முடித்துவிட்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தேன். அப்போது மூன்று பேர் என்னை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றினர். பின்னர் என்னை நொய்டாவில் உள்ள வீட்டில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வாலிபர்கள் தன்னை காரில் ஏற்றி எங்கள் வீட்டின் அருகே கொண்டுவந்து விட்டுவிட்டு சென்றுவிட்டனர் என்றும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளார்.
வாலிபர்கள் அனைவரும் சுமார் 20 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தெரிந்தவரே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் மூன்று வாலிபர்களை கைது செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது தேசிய தலைமையகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த மாதம் குர்கானில் உபெர் கார் டாக்சி டிரைவரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் சமீபத்திய பாலியல் பலாத்கார வழக்குகள் மிகவும் மோசமான சுழ்நிலையை காட்டுகிறது.
No comments:
Post a Comment