அண்மைக்காலமாக பேஸ்புக் பயனர்களின் “ஆண்டு கண்ணோட்டம்” (‘Year in Review’) எனும் சிறப்பு தொகுப்புக்களை பகிர்ந்துகொள்ளும் ஸ்லைடர் ஒன்றினை வழங்கியிருந்தது பேஸ்புக்.
பேஸ்புக் டைம்லைனில் இந்த ஆண்டில் நாம் பகிர்ந்து கொண்ட விடயங்களில் முக்கியமான சிறப்பான பதிவுகள் அல்லது நினைவுகளை திரட்டி பேஸ்புக்கே ஓர் ‘Year in Review’ஐ செய்து தந்திருந்தது.
இதில் எழுந்தது மாபெரும் சிக்கல், ‘Year in Review’தமது சோகமான தருணங்களை அமைத்து வெளியிட்டு விட்டது என பல பயனர்கள் கோபித்துக்கொள்ள சர்ச்சை எழுந்திருக்கிறது.
‘Year in Review’ஸ்லைடரில் எமது டைம்லைனில் நாம் பகிர்ந்த பதிவுகளில் சோகமான அல்லது மோசமான பதிவுகளும் உள்ளடங்கியிருக்க அதுவும் திரட்டப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க வலை வடிவமைப்பு ஆலோசகர் மற்றும் விமர்சன எழுத்தாளர் எரிக் மேயரின் பேஸ்புக் ‘Year in Review’ஸ்லைடர் முன்னிலைபடுத்தியிருக்கும் விடயமாக அமைந்திருக்கிறது அவரது இளையமகள் மறைவு குறித்து தன் வலைத்தளத்தில் அவர் எழுதியிருந்த எதிர்மறை அனுபவம் ஒன்று. இதையடுத்து பேஸ்புக் தயாரிப்பு மேலாளர், Jonathan Gheller தனிப்பட்ட முறையில் மேயரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல பயனர்களின் பேஸ்புக் ‘Year in Review’ஸ்லைடரை விமர்சித்து டுவிட்டரிலும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
சோகமான தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுடன் இறுதியில் ஸ்லைடரில் “இது ஒரு பெரிய ஆண்டு ஆகிறது! நன்றி அதில் ஒரு பகுதியாக இருப்பது.” எனும் வரிகளுடன் முடிவதால் யாராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இருப்பினும் ‘Year in Review’ஸ்லைடரை பகிர்ந்துகொள்வதுக்கு முன் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கும் ஆப்பசனை ஏன் பயன்படுத்துகிறார்கள் இல்லை எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment