ஜனவரி 8ம் தேதி, இலங்கையில், ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கடந்த மூன்று முறை இலங்கையின் அதிபரான தற்போதைய அதிபர் ராஜபக்சேவும் போட்டியிடுகிறார்.
சில மாதங்களுக்கு முன்வரை ராஜபக்சேவின் வலது கையாக செயல்பட்டு வந்த மைத்ரி பால சிறிசேன அண்மையில் எதிர்கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து ராஜபக்சேவின் ஆட்சியின் கீழ் இருந்த அமைச்சர்கள் சிலரும் எதிர்கட்சியில் சென்று இணைந்துள்ளனர்.
அதோடு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சில கட்சிகளும் அவருக்கு ஆதரவு தரவு தர தயங்குகின்றன. இதனால் அவருக்கு இந்த ஆண்டு தேர்தல் நெருக்கடி நிறைந்ததாக அமைந்துள்ளது.
என்றாலும் இந்தத்தேர்தலில் எப்படியாவது ஜெயித்தே ஆகவேண்டும் என்பதற்காக, யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும், பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
வடமாகாணத்தில் உள்ள தமிழர்கள் தங்கள் ஹிட்லர் ராஜபக்சே என்பார்கள். அவர்களிடம் எப்படியாவது, நல்லப்பெயர் எடுத்து அவர்களது வாக்குகளைப் பிடித்தால் தான் இந்த முறை ஆட்சியில் நீடிக்க முடியும் என்று கணக்கு செய்துள்ளார் ராஜபக்சே.
அதற்காக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று சிற்பபு பிரச்சாரம் செய்வது, தமிழில் பேசி பிரச்சாரம் செய்வது என்று இறங்கிவிட்டார் ராஜபக்சே. இதனைத் தொடர்ந்து ராஜபக்சே தன் செல்வாக்கை நிலைநாட்ட, இந்தியாவின் முன்னணி நடிகரான சல்மான் கானை இன்று அழைத்து பிரச்சாரம் நடத்தி வருகிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் சென்றுள்ளாராம்.
ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, சல்மான் கானின் நெருங்கிய நண்பர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையில் பிறந்து வளர்ந்து, இலங்கை அழகு ராணியாக முடிசூட்டியவர். எனவே இவர்கள் இருவரும் ராஜபக்சேவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனராம்.
No comments:
Post a Comment