உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும், ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்கொல்லி நோயை தொடர்ந்து தற்போது கனடாவை புளு நோய் அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் புளு (Flu) நோய், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கனடிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் ஆறம்ப தேதி முதல் ஆறு பிரதேசங்களில் புதிதாக 37 பேரை இந்நோய் தாக்கியுள்ளது. புளு நோயால் 32 பேர் நீண்ட காலமாக மருத்துவமனைகளில் தங்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்டா குபெக் ஆகிய பிரதேசங்களில் முதலில் புளு நோய் காணப்பட்டாலும் சஸ்கட்சுவன் மற்றும் நோவா ஸ்கோஷியா பிரதேசங்களிலும் இந்நோய் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment