Latest News

விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கு பயணம் செய்து உலக சாதனை…!


விமானத்தை பயன்படுத்தாது உலகிலுள்ள அனைத்து 201 நாடுகளுக்கும் பயணம் செய்த முதலாவது நபர் என்ற சாதனையை பிரித்தானியாவைச் சேர்ந்த கிரஹம் ஹூகெஸ் (33வயது) செவ்வாய்க்கிழமை படைத்துள்ளார்.2009 ஆம் ஆண்டு புதுவருட தினத்தன்று தனது சொந்த நகரான லிவர்பூலிலிருந்து தனது சாதனைப் பயணத்தை ஆரம்பித்த கிரஹம் பஸ்கள், வாடகைக் கார்கள், ரயில்கள், படகுகள் என்பவற்றையும் தனது சொந்தக் கால்களையும் பயன்படுத்தி 1426 நாட்களில் 160 000 மைல்கள் தூரம் பயணித்து தென் சூடானிய தலைநகர் ஜூபாவை வந்தடைந்துள்ளார்.

அவர் அத்திலாந்திக் சமுத்திர தீவான கேப் வெர்டேயை அடைவதற்காக நீர்க்கசிவுள்ள படகில் 4 நாட்களை கடலில் கழிக்க நேர்ந்தது. அதேசமயம் அவர் கொங்கோவில் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும் அவர் ரஷ்யாவுக்குள் செல்ல முயற்சித்த போதும் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் பிலிப்பைன்ஸில் அடிப்படைவாதிகளிடம் சிக்கிய நிலையில் ஜென் என அழைக்கப்படும் அரவாணியொருவரால் மீட்கப்பட்டார்.

தனது சாதனை தொடர்பில் கிரஹம் கூறுகையில் இந்த உலகம் பெரிதான அச்சம் ஏற்படுத்தும் ஒன்றல்ல. அது உங்களுக்கு உதவி செய்ய விரும்பும் மக்களால் நிறைந்தது என்பதை எடுத்துக்காட்டவே இந்த பயணத்தை மேற்கொண்டேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.