Latest News

மோடியை நம்பி மோசம் போனவர் வைக்கோ மட்டுமா ?


நாகை அவுரித்திடலில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்பட்டால், வெள்ளமே வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வராது. கர்நாடகா பழங்குடியின மக்கள் அங்கு அணை கட்டுவதை எதிர்க்கிறார்கள். எனக்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக அனுமதி வழங்க வேண்டாம். அனுமதி கொடுத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி வரும். அவர்கள் அணை கட்டும் பணியை தொடங்கட்டும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

தமிழக முதல்வர், அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்க வேண்டும். மோடியை நம்பி மோசம் போனவன் நான். மோடி உலகம் சுற்றும் வாலிபராக இருக்கிறார். வெளிநாட்டு இந்தியர்களுக்குதான் அவர் பிரதமராக இருக்கிறார். கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க மத்திய அரசு அலுவலகங்களுக்கு மின்சாரம், குடிநீர் சப்ளை கொடுக்கக் கூடாது. அந்த அலுவலகங்களுக்கு பூட்டு போடுவோம் என்று வைகோ பேசினார்.

மோடி வகையறாக்கள் யார் அவர்களுடைய சித்தாந்தங்கள் என்ன என்று தெரிந்தே மோசம் போனவர் வைகோ .

மோடியை நம்பி வைகோ மட்டும் மோசம் போகவில்லை நாட்டுமக்களும் தான் பதவிக்கும் பணத்திற்கும் தன்னுடைய கொள்கையை தூர வீசினால் என்ன நடக்கும் என்பதை வைகோ அறிந்து வெளியை வந்து இருப்பது கசப்பானது என்றாலும் இந்த தருணத்தில் பாரட்டக்குடியது தான்

மோடியை பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்த நாட்டு மக்கள் ஒட்டு போட்டு மோசம் போய்கொண்டு இருக்கிறோம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.