அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் அனகோண்டா வாயினுள் புகுந்து சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவின் நியூஜெர்சி (New Jersey) மாகாணத்தை சேர்ந்த பால் ரோசலி (Paul Rosley) என்ற சாகசக்காரர், 25 அடி நீளம் கொண்ட 400 பவுண்டு எடை கொண்ட பெண் அனகோண்டா பாம்புக்குள் நுழைந்து சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாம்பை அதிகம் காயப்படுத்தி விடக் கூடாது என்பதால் மிகவும் மென்மையாக இருக்கும் வகையில் ஸ்னேக் புரூப் (Snake Proof) அணிந்து கொண்டேன். அந்த உடை பாம்பைப் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நான் பயப்படவில்லை. ஏனெனில் இந்த உடையை முன்பே பரிசோதித்து விட்டோம் என கூறியுள்ளார்.
இந்த அதி பயங்கரமான நிகழ்ச்சியை வருகிற 7ம் திகதி டிஸ்கவரி தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
தற்போது அனகோண்டா பாம்புகளின் வாழ்விடத்தை பலரும் ஆக்கிரமித்து வருவதால் அவை அழிய ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இதற்கான விழிப்புணர்வுக்காகவே, இந்த பயங்கரமான செயலை செய்துள்ளதாக ரோசலி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment