Latest News

  

இஸ்லாமிய மதத்திற்கு மாற விரும்பிய பிரித்தானிய பிரதமர்: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்பியதாகவும், அதை அவரது உறவினர்கள் தடுத்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 1940ம் ஆண்டு முதல் 1945 வரையும், 1951 முதல் 1955 வரையும் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

இவர் குறித்து ஆய்வு செய்ய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (Cambridge University) உள்ள பழமையான ஏடுகளை வாரன் டோக்டெர் (Warron Dockter)என்ற வரலாற்று ஆய்வாளர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

அப்போது சர்ச்சிலுக்கு, அவரது சகோதரரின் மனைவியான லேடி குவன்டோலின் பெர்ட்டி (Lady Gwendoline Bertie) என்பவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், இஸ்லாமுக்கு மாறும் உங்கள் எண்ணத்தை நான் தெரிந்துகொண்டேன். அவ்வாறு செய்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். எனவே தயவு செய்து மதம் மாறாதீர்கள் என கூறப்பட்டுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.