பானாசோனிக் கைப்பேசி நிறுவனம், கண் சிமிட்டினாலே செல்ஃபி எடுக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பானாசோனிக் இந்தியா தற்போது புதிதாக வெளியிட்டுள்ள எலுகா எஸ் என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.11,190க்கு வெளியிடப்பட்டுள்ளது.
செல்ஃபிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், செல்ஃபி அல்லது குழுவாக சேர்ந்து புகைப்படம் எடுக்கும்போது, உங்கள் கண்களை சிமிட்டினாலே புகைப்படம் தானாக எடுக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் விவரங்கள்: எலுகா எஸ் 5 இன்ச், 1280*720 பிக்சல், எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் இதில் உள்ளது.
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட் இயங்குதளம் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
காமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கமெராவும் உள்ளது.
மேலும் இதில் 3ஜி எஹ்எஸ்பிஏ, வைபை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் இருப்பதோடு 2100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment