Latest News

7 சாதனைகளை கொண்டுள்ள புர்ஜ் கலிபாவை கவுரவித்து கின்னஸ் அமைப்பு குறும்படம் வெளியிட்டது


உலகின் மிகப் பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இங்கு நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி அதாவது 828 மீட்டர் உயரம் கொண்டது.

இது முழுவதும் கருப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் இங்கு உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கிரீன்லேண்ட் குரூப் கட்டிடம் 2-வது இடம் வகிக்கிறது. 632 மீட்டர் உயரம் கட்டப்பட்டு வரும் அக் கட்டிடம் வருகிற 2014-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்.

துபாயில் 828 மீட்ட‌ர் உயரம் கொண்ட புர்ஜ் கலிபா, உலகின் மிக உயர்ந்த கட்டிடம், மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதி, மிக உயர்ந்த பார்வையாளர் தளம், உலகின் உயரமான எலவேட்டர் வசதி, உயர்ந்த இடத்தில் அமைந்த குடியிருப்புகள், அதிகமான தளங்கள், மனிதனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கட்டடம், என 7 வித சாதனைகளை இக்கட்டிடம் தாங்கி நிற்கிறது .கின்னஸ் அமைப்பின் 60-வது ஆண்டு விழாவையொட்டி புர்ஜ் கலிபா கட்டிடத்தின் 7 சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இக்கட்டிடம் குறித்து, கின்னஸ் அமைப்பு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.