கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 265 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரேக்க நாட்டு துறைமுகமான பட்ராசிலிருந்து 478 பேருடன் புறப்பட்ட இத்தாலியின் “நார்மன் அட்லாண்டிக்” என்ற கப்பலில் 478 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கிரேக்க நாட்டின் கார்பு தீவு அருகே சென்றபோது கப்பலில் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனையடுத்து கிரேக்கம், இத்தாலி மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகள் ஹெலிகாப்டர் மூலம் பயணிகளை மீட்டு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் பத்திரமாக இறக்கியுள்ளனர்.
இதுவரை கப்பலில் சிக்கியிருந்த 265 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கப்பலில் எரியும் தீயை அணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது நேர்ந்த விபத்தில் ஒருவர் தீயில் சிக்கி பலியாகியுள்ளார். மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment