ஹாங்காங்: வங்கிக்கு எடுத்துச் சென்ற பணம் கீழே விழுந்ததில் 2 மில்லியன் டாலர்கள் காணவில்லை என ஹாங்காங் காவல்துறை அறிவித்துள்ளது.
ஹாங்காங்கில் வங்கிக்கு பணம் எடுத்துச் சென்ற பாதுகாப்பு வாகனத்தில் இருந்து பணம் தவறுதலாக விழுந்ததில் 2 மில்லியன் டாலர் தொலைந்து விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள கிளொசெஸ்டர் சாலையில் நிகழ்ந்துள்ளது.
கண்காணிப்பு கேமராக்களில் மக்கள் பணத்தை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. பணத்தினை எடுத்தவர்கள் காவல்துறையில் ஒப்படைக்கவில்லையென்றால் அவர்களின் மீது திருட்டு குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடரப்படும் என மாவட்ட காவல்துறை அதிகாரி வான் சியுஹாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொத்தம் 4.5 மில்லியன் டாலர்கள் விழுந்ததாகவும் அதில் 2.5 மில்லியன் டாலர்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனமான g4s , வேனின் கதவு பழுதடைந்திருந்த காரணத்தினால் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment