பா.ஜ.க மூத்த தலைவர் வாஜ்பாய்க்குப் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், என்னிடம் நெருங்கிய அன்பு கொண்டவருமான, இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மத்திய அரசு முன் வந்திருப்பதற்காக நன்றி கூறுவதோடு, விருது பெற்ற தலைவர்களுக்குத் தி.மு.க-வின் சார்பில் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், தி.மு.க-வைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று, 24-8-2014 அன்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் கடிதம் எழுதியிருந்தேன்.
எனவே, பேரறிஞர் அண்ணாவுக்கும், அறிவாசான் தந்தை பெரியாருக்கும் பாரதரத்னா விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை பிரதமரையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."
No comments:
Post a Comment