Latest News

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து 1 கோடி கையெழுத்து: பழ.நெடுமாறன் தொடங்கினார்! மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன ? ஓர் பார்வை !!


மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் திட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்.

மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற கெயில் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு புதுப்பிக்க கூடாது, மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், காவிரி படுகையை வேளாண்மை மண்டலாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை உலக தமிழர் பேரவைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன ? !!

►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது..

►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை.

• முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்…

• அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளியேற்றியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும்.

• நிலத்தடி நீர் உப்பானால் அங்கு விவசாயம் செய்ய முடியாது.

• குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் போகும்.

• பயிர்களும் மரங்களும் கருகி போகும்..

►மீதேன் வாயுவை எடுக்க உங்களிடம் அமெரிக்க நிறுவனமான GELCL உங்களிடம் நிலத்தை நாற்பது வருட குத்தகைக்கு கேட்கும்.

►நாப்பது வருடத்திற்கான குத்தகை பணத்தை ஒரே காசோலையில் கொடுத்து விடுவார்கள்.

►நம் நிலம்தான் நாப்பது வருடத்தில் நம் கையிக்கு கிடைத்து விடுமே, அத்துடன் விவசாயம் செய்தாலும் நாப்பது வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே என்று ஏமாந்து நீங்களும் நிலத்தை கொடுத்து விடுவீர்கள்.

►நாற்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி,எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும்.

►ஏற்கனவே ஆற்று நீரும், குளத்து நீரும் இல்லாம போன நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும்

►எனவே இவர்கள் உங்களிடம் நிலத்தை குத்தகைக்கு கேட்டால் தயவு செய்து கொடுத்துவிடாதீர்கள்.

►நம் எதிர்கால சந்ததியினரை வஞ்சிக்காதீர்..

►நம் எதிர சந்ததியினருக்கு நம் பசுமையான தமிழ்நாட்டை விட்டுசெல்வோம் பாலைவனத்தை அல்ல..

►ரத்தம் சிந்தி ஈன்றெடுத்த சுதந்திரத்தை மீண்டும் அயல்நாட்டு முதலாளியிடம் அடகு வைத்து விடாதீர்..

►மயிலாடுதுறை நண்பர்களே இந்த திட்டம் முதல் கட்டமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியான திருவிடைமருதூர்,நரசிங்கன்பேட்டை உட்பட்ட சில பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. நம் நிலம் மலடாவதர்க்கு நீங்களே துணைபோகாதீர்கள் நண்பர்களே..பிகு: போபால் நிகழ்வை சிந்தித்து பாருங்கள் தோழர்களே..

இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..”

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகிற்கே சோறு போட்ட இடமடா! காசுக்காக எதையும் செய்யும் பிச்சைகாரர்களே உங்களுக்கு எவ்வுளவு பணமடா வேண்டும்? கேளுங்கள் பிச்சை போடுகிறோம்! 7 கோடி பேர் இருக்கோம்!

(படம்: மீத்தேன் திட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டையில் விளை நிலங்களில் கிணறு தோண்ட ஊன்றப்பட்டிருக்கும் கல்!)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.