இந்தியாவில் கற்பழிப்பு என்றாலே முதலில் அனைவரது எண்ணத்தையும் எட்டுவது டில்லி தான். டில்லியில் தான் கடந்த 2012ம் ஆண்டு, நடைபெற்ற கற்பழிப்பு நாட்டையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து ஓடும் டாக்ஸியில் மற்றொரு கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டில்லி இந்தர்லோக் பகுதியை சேர்ந்தவர் அந்த 27 வயதான இளம்பெண். டில்லியை அடுத்துள்ள கூர்கானில் உள்ள ஒரு பன்னாட்டு நிதிக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை பணி முடிந்ததும் தம் தோழிகளுடன் அருகில் உள்ள விடுதி ஒன்றிற்க்குச் சென்று உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பியுள்ளார். அவரை டில்லியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வசந்த் விகார் என்ற இடம் வரை தோழி ஒருவர் தன் வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்து, இந்தர்லோக்கிற்கு செல்ல அவர் ஒரு டாக்ஸியை புக் செய்துள்ளார். அந்தப் பெண்ணின் அழைப்பை ஏற்று 37 வயதான ஷிவ் குமார் என்ற டாக்ஸி டிரைவர் இவரை வீட்டில் சென்று விடுவதற்காக வந்துள்ளார்.
காரில் பயணம் மேற்கொண்ட அவர் சற்று நேரத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண் தூங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் விழித்த போது மணி 9:30. கார் ஒரு ஆளில்லா ஒதுக்குபுறமான இடத்தில் ஒதுங்க, கதவுகள் பூட்டியவாறு உள்ளன.
அப்போது, அலற முயன்ற அவரை டாக்ஸி டிரைவர் ஷிவ் குமார் கடுமையாக தாக்கி, அவரை காரிலேயே வைத்துக் கற்பழித்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணை இந்திரலொக்கில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டு விட்டு, ”இது குறித்து நீ யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நீ உயிருடன் இருக்க மாட்டாய்”, என்று எச்சரித்து விட்டுச் சென்றுள்ளார்.
உடனே திரும்பிச் சென்ற அந்த டாக்ஸியின் நம்பரை, தனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டார் அந்தப்பெண். தொடர்ந்து அந்தப் பெண், இது குறித்து டில்லி சராய் ரோஹில்லா போலீஸ் நிலையத்திற்க்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் இந்தப் புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் ஷிவ் குமார் யாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, அந்த டிரைவரை தேடி டில்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொடனர். இந்த தேடுதல் வேட்டையில், நேற்று உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் இந்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த டிரைவர் மதுராவை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று இவரை போலீஸார் நீதிமன்றத்தின் முன் நிறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment