அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். மிகவும் பழமை வாய்ந்த இவை வரலாற்று சிறப்பு மிக்கது. அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்ந்து வர உதவியாக இருந்துள்ளது. மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இந்தப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடும் பலருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை ஆகியோரை பேரூராட்சி அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி, கிளை பொறுப்பாளர்கள் பீர் முஹம்மது, SP பக்கீர் முஹம்மது, M.I. அப்துல் ஜப்பார், AKS நவாஸ், MKM ஜமால் முஹம்மது, சிக்கந்தர், சேக்தாவூது, ராஜிக் ஆகியோர் சென்றனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment