டெல்லியில் தனியார் வங்கி வாகனத்தை வழிமறித்து ஒன்றரை கோடி ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தலைநகரில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கமலா நகரில் உள்ள ஏடிஎம் ஒன்றின் அருகில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் வைப்பதற்காக வேன் ஒன்றில் பணம் கொண்டு வரப்பட்டது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த வாகனத்தை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில், வாகனத்தில் இருந்த காவலர் உயிரிழந்தார். பின்னர், வாகனத்தில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். டெல்லியில் பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment