காங்கிரஸ் கட்சி இனி மூப்பனாரை முன்னிறுத்தாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர், தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்கள் செய்தவர் காமராஜர் என்றார். ஆனால், மூப்பனார், காங்கிரஸுக்காகவோ, தமிழகத்திற்காகவோ என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.
மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து பேசிய அவர், இலங்கையில் ராஜபட்சே அதிபராக இருக்கும் வரை மீனவர்கள் கைதாவது தொடர்கதையாகத் தான் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment