பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 36 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 35 இந்திய மீனவர்கள், ஒரு சாதாரண குடிமகன் உட்பட 36 இந்தியர்களும், தங்களது சிறைவாசத்தை நிறைவு செய்ததை அடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுகின்றனர்.
விரைவில் தங்களது குடும்பத்தினரை சந்திக்கப் போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இந்தியர்கள், பாகிஸ்தான் சிறையில் தாங்கள் நல்ல முறையில் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் எல்லை தாண்டும் போது கைது செய்யபடுவது அனைத்து நாடுகளிலும் எல்லைகளிலும் நடைபெறும் ஒரு நிகழ்வு தான் .ஆனால் இந்தியாவில் அதை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் அடைகிறார்கள் .
மீனவர்களை விடுதலை செய்யும் அண்டைநாடு பாக்கிஸ்தான் நமக்கு எதிரி நாடு
அன்றாடம் தமிழக மீனவர்களை கைது செய்தும் அவர்களை அடித்து துன்புறுத்தி வரும் இலங்கை நட்பு நாடு என்று கூறுகிறார்கள் நமது அரசியல் வியாதிகள்
No comments:
Post a Comment