Latest News

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


இந்திய நாட்டுக்கு ‘இந்தியா’ என்ற பெயரை மாற்றிவிட்டு ‘பாரத்’ என பெயர் சூட்டுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி, நிரஞ்சன் பட்வால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் மனுதாரர், தனது கோரிக்கையை சமர்ப்பித்து கருத்துகளை பெற வேண்டும். அதன் பின்னரே கோர்ட்டை அணுக வேண்டும். மாறாக நேரடியாக நீதிமன்றத்தை அணுகக்கூடாது’ என கூறினர்.

பின்னர் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். எனினும் இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கைக்கு அரசு பதிலளிக்க மறுத்தாலோ, நிராகரித்தாலோ புதிய மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.