பேஸ்புக்’ மூலம் ஏற்பட்ட காதலில் பள்ளி மாணவி கடத்தி கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதல்
தமிழகத்தை சேர்ந்தவர் ஹரீஷ் போவி(வயது 23). இவர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் தங்கி, சுற்றுலா வாகன டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், உடுப்பி டவுன் அஜ்ரகாடு பகுதியை சேர்ந்த அனு(16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. அனு உடுப்பியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் தினமும் பேஸ்புக்கில் தகவல் பரிமாறி நட்பை வளர்த்து வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு, தினமும் பேசி காதலை வளர்த்து வந்தனர்.
கற்பழிப்பு
இந்த நிலையில், ஹரீஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுவை போனில் தொடர்புகொண்டு, ‘நான் உன்னை பார்க்க விரும்புகிறேன். அதனால் கார்கலாவுக்கு நீ வர வேண்டும்’ என்று கூறினார். அதன்பேரில் அனுவும் நேற்று முன்தினம் கார்கலாவுக்கு வந்தார். பின்னர் இருவரும் இரியடுக்காவுக்கு சென்றனர்.
பின்னர் ஹரீஷ், அனுவை அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், ஹரீசிடம் இருந்து அனுவை மீட்டனர். பின்னர் இதுகுறித்து இரியடுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வாலிபர் கைது
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹரீஷ், அனு ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் போலீசார், அனுவின் பெற்றோரை வரவழைத்து, அனுவுக்கு அறிவுரை கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தங்களது மகளை கடத்தி கற்பழித்து விட்டதாக ஹரீஷ் மீது இரியடுக்கா போலீசில் அனுவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


No comments:
Post a Comment