இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, 2 நாள் சர்வதேச மாநாடு ஒன்றை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இம்மாநாடு புதுடெல்லியில் இன்று துவங்கியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இம்மாநாட்டை துவங்கி வைத்தார். ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், நேபாளத்தின் முன்னாள் பிரதமர், பூடான் ராணி, வங்கதேச அவாமி கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பா.ஜ. கூட்டணியில் இல்லாத சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன்சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
மாநாட்டில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு குடும்பத்துக்கு மட்டுமே ஜவஹர்லால் நேரு சொந்தமானவர் அல்ல. அவர் இந்த நாட்டுக்கே சொந்தம். இந்நிகழ்ச்சிக்கு பிரதமரை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார். மாநாட்டை துவக்கிவைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
மதச்சார்பின்மை இல்லாமல் இந்தியாவும் இல்லை, இந்தியர்களும் இல்லை. ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் மதச்சார்பின்மை தனித்துவம் பெற்று விளங்குகிறது. மதத்தை வைத்து இந்தியாவை துண்டாட மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.


No comments:
Post a Comment