Latest News

மருத்துவ உலகின் சாதனை! எபோலா மருத்துவர் முற்றிலும் குணமடைந்தார் (வீடியோ இணைப்பு)


நியூயோர்க்கை சேர்ந்த எபோலோ நோய் தாக்குதலுக்குள்ளான மருத்துவர் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது குணமடைந்துள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோய், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், இந்த நோயால் இதுவரை 5,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மேலும், 13,000க்கும் மேற்பட்டோர் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எபோலா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆப்ரிக்க நாடான கியூனாவில் பணிபுரிந்த அமெரிக்க மருத்துவர் ஸ்பென்சர்(33) என்பவருக்கு எபோலாவின் பாதிப்பு இருப்பது கடந்த மாதம் 23ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஸ்பென்சருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு புதிய மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின் ஸ்பென்சர் குணமடைந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.

மேலும், எபோலா நோய்க்கு மருந்துகள் இல்லை என்ற நிலையில் இந்நோய் பாதித்த ஒருவர் முற்றிலுமாக குணமடைந்திருப்பது மருத்துவ உலகில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.