நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடத்துக்கான வயது வரம்பு 40 ல் இருந்து 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் காலி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் போக்குவரத்து கழகம் (திருநெல் வேலி மண்டலம்) அறிவித்து இருந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் 8.12.2014க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதற்கிடையே கண்டக்டர் பணிக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கண்டக்டர் பணியிடத்துக்கு இதர வகுப்பினர் 30 வயது பூர்த்தியாகாமலும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர் மரபினர் 35 வயதுக்கு பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் டிரைவர், கண்டக்டர்கள் இரு பிரிவினருக்கும் 40 வயது என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது கண்டக்டர் பணியிடத்துக்கு 35 வயது என்பது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 25 வருடம் வரை காத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த பலர் ஏமாற்றம் அடைவர். இது பற்றி
முதல்வர் தனிபிரிவுக்கு மனு அனுப்பி உள்ளோம் என்றார்.


No comments:
Post a Comment