Latest News

வெளிநாட்டு வேலைக்கு ஆசை- ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் 9.40 லட்ச ரூபாய் ஏமாந்த வாலிபர்!

அரக்கோணம்: அரக்கோணத்தில் வெளிநாட்டு வேலைக்காக ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் ஆன் - லைனின் 9.40 லட்சம் அளித்து ஏமாந்த இளைஞர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் ஜெகன். டிப்ளமோ படித்துள்ளார்.வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பி இணையதளம் மூலம் வேலை தேடிவந்தார்.

மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம்:

அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அவருக்கு ஆன்-லைனில் விண்ணப்பம அனுப்பியுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஜெகன் ஆன்-லைனில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தார்.

நம்பி செலுத்திய வாலிபர்:

அதை நம்பி 4 தவணைகளில் ஜெகன் தக்கோலத்தில் உள்ள வங்கி கிளையில் ரூபாய் 9.40 லட்சம் செலுத்தியுள்ளார்.

வேலை உத்தரவு கிடைக்கவில்லை:

ஆனால் அதனைத் தொடர்ந்து பலமுறை முயன்ற போதும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு வேலை உத்தரவும் வழங்கவில்லை.

நிறுவனம் குறித்து விசாரணை:

இதுகுறித்து ஜெகன் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்ற போலீஸார் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆஸ்திரேலிய நிறுவனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.