ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் 40 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செல்போனில் பேசுவது, எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை அனுப்புவது என்ற நிலைமாறி, செல்போன் மூலம் இணையதள சேவை பெறும் வசதியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் 50 கோடி பேர் செல்போன் மூலம் இணையதள சேவை வசதியை பயன்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது.
இ,மெயில் அனுப்புவது, காட்சிகளை பதிவு இறக்கம் செய்வது, பாடல்கள் ரசித்து கேட்பது, ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து தாங்கள் இருக்கும் இடத்திற்கு பொருட் களை வரவழைத்து வாங்கிக்கொள்வது உள்ளிட்ட வசதிகளை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த சேவைகளை மிக எளிதாக பெறுவதற்கு முக்கிய காரணம் மிக குறைந்த விலைகளில், ‘ஸ்மார்ட் போன்கள்’ சந்தையில் கிடைப்பது. தற்போது 13 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இது, அடுத்த 4 ஆண்டுகளில் 40 சதவீதத்தை தாண்டும் என்றும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment