HRD(Human Resource Development) attestation எளிதில்பெறும் வழிமுறைகள் :
வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெற
வேண்டும்.நமது சான்றிதழ்
உண்மையானது தானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD
முடித்து வரும்.
மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட
HRD செய்வதற்கு நம்மில் பலர்
முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம்
பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர்.
நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல்
முடிந்துவிடும்.இடைத்தரகர்கள் ₹3000 முதல்
₹4000 வரை கேட்பார்கள்.
*Apply செய்ய வேண்டிய
இடம்:தலைமை செயலகம்.
*நேரம்:காலை 10 மணிக்கு மேல்.
தேவையான documents:
1.Degree original+2 set of Xerox both front&back.
2.Offer letter
3.2 set of passport Xerox
4.Application form Xerox(தலைமை செயலகத்தில்
கொடுப்பார்கள்)
வழிமுறைகள்:
தலைமை செயலகத்தில் HRD க்கு வாயில் எண்
7ல் ஒதுக்கி உள்ளார்கள்.அங்கே சென்று ஒரு application form கொடுப்பார்கள்
அதை தெளிவாக நிரப்பிய பின்மேலே கொடுக்கப்பட்ட அனைத்து documents
களையும் இணைத்து கொடுக்க வேண்டும்.
அவர்கள் documents சரி பார்த்து Application Xerox
இல் ஒரு நம்பர் எழுதி கொடுப்பார்கள்(அந்த
நம்பர் தான் முக்கியம்)
தலைமை செயலகத்தில் பெற்ற அந்த Application
form Xerox உடன் ₹500 மதிப்புள்ள
ஒரு டிடியை கீழ்கண்ட முகவரியில்(The
Controller of Examinations,Anna University,Chennai-25)எடுத்து தலைமை செயலகத்தில் கொடுத்த அனைத்து documents களின் Xerox களையும் இணைத்து சென்னையில் உள்ள Anna Universityல் கொடுத்தால் போதும் இன்ஷா அல்லாஹ் 20வேலை நாட்கள்
கழித்து தலைமை செயலகத்தில்
பெற்று கொள்ளலாம்.
No comments:
Post a Comment