வளைகுடா நாடுகளில் ‘சக்தி வாய்ந்த இந்தியர்கள்‘ பட்டியலை, பிரபல அரேபியன் பிசினஸ் என்ற இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரான யூசுப் அலி, இந்தப் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார். இவர் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனமான லுலு குழுமத்தின் நிர்வாக இயக்குனராக (எம்.டி) உள்ளார். அபுதாபியை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தக் குழுமம், 32 நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளது. இதன் கடந்த ஆண்டு வருமானம், ரூ.33,500 கோடியாக உள்ளது.
31 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மத்திய கிழக்கு நாடுகளில் லுலு குழுமம், அதிக அளவில் சூப்பர் மார்க்கெட்டுகளை அமைத்து, வலுவாக காலூன்றி உள்ளது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment