கோபன்ஹோகன் நகர இதயநோய் பிரிவு, 20 முதல் 93 வயதிற்குள் உள்ள 20000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் செய்த ஆய்வில், ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் ஜாக்கிங் செய்தாலே போதும் உங்களுடைய வாழ்நாளில் 6 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தயிரை அனுபவியுங்கள்
ஒரு நாளைக்கு ஒரு சிறு கோப்பை தயிரை உள்ளே தள்ளுவதன் மூலம், உங்களுக்கு இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு 3 மடங்கு குறைகிறது என்று அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தினர் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இயற்கையாகவே கிடைக்கும் கால்சியம், இரத்த நாளங்களை நெகிழ்ந்து கொடுக்க வைப்பதால், அவை சற்றே விரிவடைந்து, இரத்த அழுத்தம் குறைவாக பராமரிக்கப்பட உதவுகின்றன. ஒரு நாளைக்கு 120 கிராம் அளவிற்கு தயிரை சாப்பிடுபவர்களுக்கு, 15 ஆண்டு காலத்திற்கு சுமார் 31 சதவிகித அளவு உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
வாழ வைக்கும் வாழை!
பொட்டாசியம் நிறைந்த உணவான வாழைப்பழத்தை சாப்பிடுவதாலும் மற்றும் உப்பின் அளவை குறைப்பதாலும், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற ஒரு புதிய ஆய்வு முடிவு பிரிட்டிஷ் ஆன்லைன் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. உடலில் உள்ள நீர்மங்களின் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்ய மிகவும் அவசியமான சத்தாக பொட்டாசியம் உள்ளது. வாழைப்பழத்தில் இந்த சத்து மிகவும் நிரம்பியுள்ளது.
உப்பை குறையுங்கள்
நீர்மங்களிலிருந்து வரும் உப்பு, இரத்த நாளங்களின் அளவையும், அழுத்தத்தையும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நீங்கள் உப்பை எண்ணி மட்டும் வருத்தப்பட்டு பயனில்லை – பதப்படுத்தப்பட்ட உணவுகளான பிஸ்கட்டுகள், சிற்றுண்டி தானியங்கள், துரித உணவுகள் மற்றும் உடனடி உணவுகளில் தான் நாம் சாப்பிடும் உப்பில் 80 சதவிகிதம் உள்ளது என்று இரத்த அழுத்த அமைப்பு தெரிவிக்கிறது. 100 கிராமுக்கு 1.5 கிராம் உப்பு இருந்தால் அது மிகவும் அதிகம். ஆனால் 100 கிராமுக்கு 0.3 கிராம் இருந்தால் அது குறைவு. இவ்வாறு உப்பின் அளவு குறிப்பிடப்பட்டுள்ள லேபிள்களை கவனியுங்கள்.
புகை நமக்குப் பகை
பல்வேறு விளம்பரங்களில் வந்தாலும் புகைப்பிடிப்பவர்கள் புகையுடன் சேர்த்து வாழ்க்கையையும் கைவிட்டுக் கொண்டுள்ளனர். சிகரெட்களிலுள்ள நிக்4கோடின் உடலிலுள்ள அட்ரீனலினை தூண்டுவதால், இதயம் வேகமாக துடிக்கத் தொடங்குகிறது. இதனால் வேகமாக இயங்கும் கட்டாயத்திற்கு உங்களுடைய இதயம் தள்ளப்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
குறைவான வேலை செய்யவும்
அலுவலகங்களில் தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் வேலை செய்வதால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் 14 சதவிகிதம் அதிகரிப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினர் கண்டறிந்துள்ளனர். இந்த அபாயம் ஓவர்டைம் செய்யும் போது மேலும் அதிகரிக்கிறது. 40 மணிநேரம் வேலை செய்பவர்களை விட, 51 மணிநேரம் தொடர்ந்து அளவிற்கு வேலை செய்து கொண்டே இருந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வர 29 சதவிகிம் அதிக வாய்ப்புகள் வர உள்ளன.
ஓவர்டைம் வேலை செய்வதால் உடற்பயிற்சிகள் செய்யவோ அல்லது ஆரோக்கியமாக சாப்பிடவோ முடிவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே, போதுமான நேரத்திற்கு ஓய்வு எடுக்கும் வகையில் உங்கள் கைகளில் உள்ள கருவிகளை ஓரமாக வையுங்கள் மற்றும் மாலை வேளைகளில் ஆரோக்கியமான உணவை சாப்பிடத் தொடங்குங்கள். நீங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் செய்தியை உங்களுடைய கணினியில் செய்து வையுங்கள்.
குறட்டைக்கு தேவை உதவி
மிகவும் சத்தமாகவும் மற்றும் கட்டுப்படுத்த முடியாமலும் குறட்டை விடுவது தூக்கத்தை முழுமையாக தொந்தரவு செய்யும் விஷயமாகும். இந்த வகையில் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அந்த வயதையோ அல்லது பொதுவான ஆரோக்கியமோ அடைய முடியாதவர்களாகவே உள்ளார்கள். ஆல்கஹால் மற்றும் சிகரெட்களை தவிர்ப்பதும், எடையை குறைப்பதும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
காபி வேண்டாம்
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் செய்த ஆய்வு, 500 மில்லி கிராமிற்கும் அதிகமான அல்லது 3 கோப்பை காபி குடித்தால் போதும், இரத்த அழுத்தம் 3 புள்ளிகள் உயருகிறது என்று தெரிவிக்கிறது. மேலும் இந்த விளைவு படுக்கைக்கு செல்லும் வரையிலும் இருக்கும். காப்ஃபைன் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை இறுக்கி விடுவதால், அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து விடுகின்றன.
பீட்ரூட் காட்டும் ரூட்
உயர் இரத்த அழுத்தம் பற்றிய ஒரு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 250 மில்லி பீட்ரூட் சாற்றை குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை 7 சதவிகித அளவிற்கு குறைக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. பீட்ரூட்டில் இயற்கையாகவே அதிகமாக இருக்கும் நைட்ரேட்டின் காரணமாக இந்த விளைவு ஏற்படுவதாக கருதப்படுகிறது. முட்டைக்கோஸ் மற்றும் கீரைகள் போன்ற பிற சத்தான உணவுகளை சாப்பிடுவதும் உங்களுக்கு உதவக் கூடும்.
No comments:
Post a Comment