உலகளவில் அதிக தற்கொலைகள் நடப்பது இந்தியாவில்தான் என்று ஐ.நா அமைப்பின் நிறுவனமான உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகையில், 1 லட்சம் பேரில் 20.9 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 13.7 சதவீதம் பேரும், இங்கிலாந்தில் 6.9 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது அந்த புள்ளிவிவர அறிக்கை.
அதேபோல இந்தியாவின் தேசியக் குற்றவியல் கழகம், சராசரியாக இந்தியாவில் 1 லட்சம் பேரில் 10.7 சதவீதம் பேர் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்துகொள்ளும் இந்தியர்களில் விவசாயிகளை விட மற்ற தொழில் செய்வோர்களே அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவில், வட மாநிலங்களைவிட தென் மாநிலங்களைச் சேர்ந்தோரே தற்கொலையில் முன்னணி வகிக்கின்றனர். 1 லட்சம் பேரில், கேரள மாநிலத்தில் 25.63 சதவீதம் பேரும், தமிழகத்தில் 22.33 சதவீதம் பேரும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 16.89 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 17.91 சதவீதம் பேரும், கோவாவில் 22.12 சதவீதம் பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
மேலும் மகராஷ்டிராவில் 25.18 சதவீதம் பேரும், மணிப்பூரில் 0.19 சதவீதம் பேரும், பீகாரில் 1.81 சதவீதம் பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4.06 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உலக அளவில் ஆண்டுதோறும் சராசரியாக 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும், அதிலும் 19 வயதில் இருந்து 25 வயதிற்கு உட்பட்டவர்களே இந்த செயலில் அதிகம் ஈபடுகின்றனர் என்றும் இதற்கு மிக அடிப்படையான காரணமாக பொருளாதாரப் பற்றாக் குறையே உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment