சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள 3 பேரின் பெயர்கள் மீடியாக்களுக்கு கசிந்துள்ளன.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணமாக சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள, பணம் பல ஆயிரம் கோடியை தாண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருப்பு பண மீட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த பிரமாணப் பத்திரத்தில் யாருடைய பெயர்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கும், சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் யார், யார், தமிழக அரசியல்வாதிகள் பெயர்கள் இதில் உள்ளதா என்பது போன்ற ஆர்வம் பல தரப்பிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ள பெயர்கள் மீடியாக்களுக்கு லீக் ஆகியுள்ளன.
அதன்படி, டாபர் நிறுவன முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன், குஜராத் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்கு வர்த்தகர் பங்கஜ் சமன்லால் லோதியா, கோவாவை சேர்ந்த கனிம சுரங்க அதிபர் ராதா டிம்போலா ஆகியோரது பெயர்கள் லீக் ஆகியுள்ளன.
இந்த மூவரில் ஒருவரும் அரசியல்வாதி கிடையாது. எனவே அரசியல்வாதிகள் பெயர்கள் இந்த பட்டியலில் வெளிவராது என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment