ஜாமீனில் வெளிவந்த நாள் முதல் ஜெயலலிதா யாரையும் சந்திக்காமல், போயஸ் கார்டனில் இருந்து வருகிறார்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை மட்டும் சந்தித்து சில ஆணைகளை பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில் வரவிருக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் ஜெயலலிதா பங்கேற்பாரா என்ற பேச்சு கட்சியினரிடையே எழுந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக தலைமை கழகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், தேவர் ஜெயந்தி விழா சென்னை நந்தனம் தேவர் சிலை முன்பு நடக்கும். இதற்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையேற்பார்.
அதில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் இருந்து ஜெயலலதி இந்த விழாவில் பங்கேற்க மாட்டார் என்றே தோன்றுகிறது. மேலும் கடந்த ஆண்டு நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வராக சென்று மரியாதை செலுத்தினார்.
கடந்த பிப்ரவரி மாதம் பல கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை பசும்பொன் சென்று வழங்கினார். வரும் 30ம் திகதி அவர் ராமநாதபுரம் செல்லும் திட்டம் இது வரை எதுவுமில்லை.
சென்னை நந்தனம் சிலைக்கும் மரியாதை செலுத்துவாரா என்பதும் அறிவிக்கப்படவில்லை.
இதனால் ஜெயலலிதா ஜாமீன் காலம் முழுவதும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் தவிர்த்து விடவே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
உயர்நீதிமன்றத்தில் அப்பீல் முடியும் வரை இந்த நிலையே நீடிக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment