மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை பார்க்க ஸ்கூட்டரில் நேற்று நிதின் கட்காரி சென்றுள்ளார்.
அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம், ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறியுள்ளீர்களே என்று கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், தலைவர்கள் மற்றும் கட்சியினரின் அணுகுமுறையை இது காட்டுகிறது.
மேலும் இது சின்ன விடயம் தான், ஆனால் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சரே விதிகளை மீறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment