விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி முதியவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் தேவேந்தர் சிங் (62). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஹ¨ஸ்டன் நகரில் இருந்து நியூஜெர்சிக்கு விமானத்தில் சென்றுள்ளார்.
அப்போது விமானத்தில் இவரது பக்கத்து இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார். விமானப் பயணத்தின் போது தூங்கிக் கொண்டிருந்த தனக்கு தேவேந்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தேவேந்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நெவர்க் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தேவேந்தர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
எனவே, அவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஸ்டான்லி ஆர்.செல்சர் தீர்ப்பு வழங்கினார். மேலும், 2 ஆண்டுகளுக்கு தேவேந்தர் சிங் கண்காணிக்கப்படுவார் என்றும் அவர் பாலியல் குற்றவாளி என அறிவிக்கப்படுவார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment