பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி, இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.கேரளாவின் பெரும்பழுதூர் கல்லுமல்லா பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், பேஸ்புக் மூலம் பல இளம்பெண்களுடன் நட்பாக பழகியுள்ளார்.
பின்னர் அவர்களை காதலிப்பதாக கூறி நாடகம் ஆடியதுடன், திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதிகொடுத்து பின்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிசாருக்கு பல புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன, இதனையடுத்து திருவனந்தபுரம் பூவார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 22 வயது கட்டுமானத் தொழில் செய்து வரும் இளைஞர் மீது சந்தேகம் வந்தது.
பின்னர் அவரின் நடவடிக்கைகளை கண்காணித்து, இளைஞரைக் கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரிடம் நெருங்கிப் பழகிய பெண்களின் புகைப்படங்கள், வீடியோ படங்கள் மற்றும் பெண்களின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment