கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இறந்து கிடந்தார்.
உடலில் காயங்களுடன் காணப்பட்ட அந்த சிறுமி விஷம் அருந்தி இறந்திருப்பது தெரிய வந்தது. பொலிசார் சிறுமியின் உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர். இதில் எந்த தகவலும் கிடைக்காததை தொடர்ந்து பொலிசார் அந்த சிறுமியின் உடலை அனாதை பிணம் என அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை காணவில்லை எனவும், அவருக்கு 14 வயது என்றும், அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் பொலிசில் புகார் செய்தார். அதில், தனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறி இருந்தார்.
இது தொடர்பாக கோழிக்கோடு பொலிசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே அவர்களால் அனாதை பிணம் என புதைக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காண்பித்தனர். இதில் சிறுமி அந்த பெண்ணின் மகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பொலிசார் அந்த சிறுமி இறந்தது எப்படி? என்பது குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், சிறுமியின் தந்தை பென்னி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பினிதா (வயது 38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தந்தையும் கள்ளக்காதலியும் உல்லாசமாக இருந்ததை சிறுமி பார்த்துவிட்டார்.
இதை அவர் வெளியில் சொல்லி விடுவார் என்று கருதி பென்னியும், அவரது கள்ளக்காதலி பினிதாவும் சேர்ந்து சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரிய வந்தது.
இதற்கு பென்னியின் மகனும், பினிதாவின் மகனும் துணை போனதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரையும் கோழிக்கோடு பொலிசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment