இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ராஜபக்சே பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கவுரவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், ”நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு தமிழகத்தில் கண்டங்கள் வலுபெற்று வருகிறது .ஈழத்தில் பலலெட்ச கணக்கான தமிழ் உறவுகளை கொன்று குவித்த மிருகத்திற்கு நம் நாட்டின் உயர்ந்த பாரத ரத்னா விருது க்கு ராஜபக்சேக்கு கொடுக்க சொன்னது மிகவும் கண்டிக்க தக்கது .
சுப்ரமணி சாமி தொடர்ந்து இது போன்ற அறிக்கைகை விட்டு தமிழ் உணர்வாளர்களை புண்படுத்தி கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது
No comments:
Post a Comment