இந்தியர்களாகிய நாம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு எது வென்றால் அது கிரிக்கெட்டாக தான் இருக்கும் . அதனை தவிர நம்க்கு எந்த விளையாட்டும் தெரியாது. நமது மக்கள் தான் அப்படி என்றால் நமது அரசாங்கம் அதற்கு மேல். அவர்களும் கிரிக்கெட்டை மற்றும் தான் ஆதரிக்கிறார்கள். சமீபத்தில் தான் ஆசிய விளையாட்டு போட்டிகள் முடிந்தன.
அதில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பில்லை என இந்தியா தனது வாள்வீச்சு வீர்ர்களை அனுப்பவில்லை. இது நமது வீரர்கள் மீது நமது அரசு வைத்து இருக்கும் நம்பிக்கை. இதற்கு அடுத்து ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
அவர் தனது சொந்த செலவில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த சீசனில் அவர் பெற்று வரும் தொடர் வெற்றிகள் காரணமாக அவர் தரவரிசையில் 315 வது இடத்தில் இருந்து 77 வது இடத்துக்கு முன்னேறினார். இன்னும் சில இடங்கள் முன்னேறி 32 வது இடத்துக்குள் வந்துவிட்டால் அவரால் நேரடியாக 2016 ஒலிம்பிக்கில் பங்குபெற முடியும். அதற்கு அடுத்து வரும் போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தாலே போதும். அடுத்து அக்டோபர் 27 ஆம் தேதி உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்கு ஸ்பான்சர் இல்லாமல் அவர் தவித்து வருகிறார். ஏற்கனவே ஆசிய போட்டிகளில் பங்கேற்றதற்கே 70 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகி விட்டது. இப்போது உலக சாம்பியன்ஷிப்பில் பங்குபெற வேண்டுமானால் 3 இலட்சத்துக்கு மேல் செலவு ஆகும் . அதற்கு உரிய ஸ்பான்சர் இல்லாமல் தவித்து வருகிறார். இவருக்கு உதவ நினைப்பவர்கள் இந்த எண்ணில் 9962742561 தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment