சீனாவில் குழந்தை ஒன்று தனது அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டின் ஜன்னல் வழியாக இறங்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் (Beijing) உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் குடும்பம் ஒன்று 5 வயது சிறுமியுடன் வசித்து வருகிறது.
சம்பவத்தன்று சிறுமியை விட்டிலேயே தனியாக விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அப்போது தனியாக இருந்த சிறுமி வெளியே செல்ல ஜன்னல் வழியாக இறங்கியுள்ளார்.
சிறுமியின் உடல் பகுதி ஜன்னலுக்கு வெளியே வந்த நிலையில் அவரது தலை மட்டும் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி கொண்டுள்ளது.
இதனால் தொங்கிய நிலையில் சிறுமி செய்வதறியாது திகைத்துள்ளார். இதனை பார்த்த சிலர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் தொங்கி கொண்டிருந்த சிறுமியை பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்
No comments:
Post a Comment