அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது யூனுஸ். இவரது மகன் ரபீக் ( வயது 39 ). இன்று மாலை பட்டுக்கோட்டையிலிருந்து தனது இன்னோவா வாகனத்தை அதிரையை நோக்கி ஓட்டி வந்துள்ளார். வாகனம் விலாரிக்காடு பகுதியில் வந்த போது வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து சிதறியது. இதில் நிலைகுலைந்த வாகனம் இடது புறத்தில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் பம்பிங் மோட்டார் கட்டிடத்தில் மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிசென்ற ரபீக்கின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த அப்பகுதியினர் பலத்த காயமடைந்த ரபீக்கை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து மேற்கோள் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாகனம் கட்டிடத்தில் மோதியதில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. மோட்டார் பம்பிங் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். திடீர் விபத்தால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment