என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து காதலிக்க வற்புறுத்தியவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட நட்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ராதிகா (வயது 22 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருவள்ளூர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜீனியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாளில் தனது ஊரான தஞ்சாவூருக்கு கோயம்பேட்டில் இருந்து பஸ்சில் அடிக்கடி சென்று வருவார்.
அப்போது அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியை சேர்ந்த மணி என்ற மணிகண்டன்(33) என்பவர் டிக்கெட் எடுத்து கொடுத்து வந்தார். இதில் அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. தனக்கு அடிக்கடி டிக்கெட் எடுத்து கொடுத்து வந்ததால் ராதிகா அவரிடம் சரளமாக பேசி பழகி வந்தார்.
காதலிக்க வற்புறுத்தல்
இந்த நிலையில் நட்புடன் தன்னுடன் பழகிய ராதிகாவிடம் மணி ஒரு நாள் உன்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறினார். ஆனால் இதனை ராதிகா ஏற்கவில்லை.
இதற்கிடையே ஒரு முறை ராதிகாவை மணி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அப்போது ராதிகாவுக்கு மணி குளிர்பானம் வாங்கி கொடுத்தார். இதை குடித்ததும் அவர் மயங்கினார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து ராதிகா எழுந்த போது ஒரு அறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நான் இங்கு எப்படி வந்தேன்? என கேட்டார். ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் மணி அவரை அழைத்து வந்தார்.
ஆபாச படம்
கடந்த சில நாட்களுக்கு முன் ராதிகாவை தொடர்பு கொண்ட மணி தன்னை காதலிக்க வலியுறுத்தினார். ஆனால் அதற்கு ராதிகா மறுத்துவிட்டார்.
அப்போது மணி ராதிகாவிடம் ‘உன்னை சமயபுரம் அழைத்துச்சென்றபோது உனக்கு மயக்கம் மருந்து கலந்து குளிர்பானம் கொடுத்தேன். அதை குடித்த நீ மயங்கியபோது உன்னை எனது செல்போனில் ஆபாச படம் எடுத்தேன். நீ காதலிக்க மறுத்தால் அந்த படத்தை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்’ என்று மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக மணியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மனைவியை கொன்றவர்..
கைதான மணி ஏற்கனவே தனது மனைவியை ஆசிட் வீசி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment