தாய்லாந்தில் மருத்துவமனையில் அழகு சிகிச்சைக்காக சென்ற பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் மயக்கத்தில் இருந்த போது உயிர் இழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் பெண் ஒருவர் தனது முதுகு எலும்பில் இருந்த கீறலை சரி செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்திருந்த நிலையில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பெண் அந்த மருத்துவமனையில் இரண்டாவது முறையாக சிகிச்சை பெறவந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து சிகிச்சை செய்த மருத்துவர் சோம்பாப் (51) பொலிசாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், இவர் அழகு சிகிச்சை செய்ய உரிய சான்றில்லாத மருத்துவர் என தெரியவந்துள்ளது.
தற்போது இந்த பெண்ணின் இறப்பு பற்றி பிரித்தானியா தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அழகு சிகிச்சைகளுக்கு பிரபலமான நாடாக விளங்கும் தாய்லாந்தில், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment