தமிழகத்தில் பாஜக எப்படியாவது தில்லுமுல்லு வேலைகளை செய்தாவது தன் கட்சியை கால் ஊன்ற வேண்டும் என்றும் ஊயிரை கொடுத்து போராடிவருகிறது எனலாம் அந்தளவிற்கு பல அரசியல் சூழ்ச்சிகளை செய்துவருகிறது.
தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் கைதான நிலையில் இதோடு திராவிட கட்சிகளை ஒடுக்கிவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு பாஜக பசு தோல் போர்த்திய புலியாக வளம் வரம் ஆரம்பித்தன.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களை கட்சிக்கு வருமாறு முதல் அமைச்சர் சீட்டை காட்டி ஆசைவார்த்தைகளை ஊட்ட ஆரம்பித்து பாஜகவிற்கு அழைத்தன. ஆனால் ரஜினி பிடிக்கொடுக்காமலேயே காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் ஜெயலலிதா விடுதலை பெற்று தமிழகம் வந்தவுடன் ரஜினி காந்த் தன் வாழ்த்து கடிதத்தை அனுப்பி அரசியலில் பரப்பையூட்டினார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாஜக தமிழக தலைமை நடிகர்களை வைத்து அரசியல் செய்ய எங்களுக்கு தேவை இல்லை என்று வசனம் பேச ஆரம்பித்தார்கள். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகனும் காங்கிரஸின் முக்கிய புள்ளியுமான கார்த்திக் சிதம்பரம் ரஜினி காந்தை சந்தித்துள்ளார். இதனால் பாஜக தலைமை கடும் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment