தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டுக் குழுவின் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) புதிய தேசிய தலைவராக தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக கேரளாவைச் சார்ந்த பேராசிரியர் பி.கோயா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் இந்தியன் சோசியல் இன்ஸ்ட்யூட்டில் நடந்த என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதர நிர்வாகிகள் வருமாறு:
துணைத் தலைவர்கள்: வழக்கறிஞர் ஒய்.கே.ஷபானா (மும்பை), வழக்கறிஞர் முஹம்மது ஷெரீஃப் (கேரளா)
செயலாளர்கள்: வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப்(தமிழ்நாடு), ரெனி ஐலின்(கேரளா)
பொருளாளர்: நரேந்திரமொகந்தி (ஒடிசா)
தேசிய கவுன்சில் உறுப்பினர்கள்: பேராசிரியர் நாகரி பாப்பையா, பேராசிரியர் என்.ரமேஷ், ஏ.கே.அகோடியா, வழக்கறிஞர் சுகுமாரன், குட்டி ரேவதி, வழக்கறிஞர் தங்கசுவாமி, வழக்கறிஞர் கார்த்திக் நவயான், முஹம்மது காக்கஞ்சே, வழக்கறிஞர் முஹம்மது தன்வீர், மகேஷ் சந்திரகுரு, வழக்கறிஞர் ஷெஃபான் ஷேக், ஜோதி ஜக்தப், வழக்கறிஞர் அன்ஸாரி, ருபாலி ஜாதவ், டாக்டர் சுரேஷ்குமார், ஸ்ரீனிவாசராவ்.
No comments:
Post a Comment