டெல்லி: காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களால் லோக்சபாவில் இன்று அமளி ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் லோக்சபாவில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அதிமுக குழு தலைவர் தம்பிதுரை வலியுறுத்திப் பேசினார். இதற்கு கர்நாடகா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் அணுகுமுறை குறித்து தம்பிதுரை பேசினார். அதற்கு கேரள எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment