Latest News

விண்டோஸ் 8 ஹேங் ஆகுதா? ரெம்ப சிம்பிள் !!


உங்களது கம்பியூட்டர் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டரா?

திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.

இதன் தலைப்பு “Choose an option” என இருக்கும். இதில் “Continue”, “Troubleshoot” மற்றும் “Turn off your PC.” என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்;

அல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், “Advanced options” என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.

இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.

ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும்.

மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்…

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.