அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC) சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகின்ற மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை மேலத்தெரு மருதநாயகம் திடலில் சிறப்பாக துவங்கியது. கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த தலைசிறந்த 16 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தனர்.
தொடர் போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் சரவணா ஸ்போர்ட்ஸ் கிளப் பாண்டிச்சேரி அணியினரும், தஞ்சை அணியினரும் மோதினார்கள். இதில் டாஸ் வென்ற பாண்டிச்சேரி அணியினர் பேட்டிங் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாண்டிச்சேரி அணியினர் வெற்றி பெற்றனர்.
இதைதொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் ராஜிக், மலேசியா உணவக அதிபர் சகாபுதீன், சாதிக், தாயகம் திரும்பியுள்ள வெளிநாடு வாழ் சகோதரர் ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள்.
முதல் பரிசு ரூ 30,018 அணியினருக்கும், இரண்டாம் பரிசு ரூ 25,018 தஞ்சை அணியினருக்கும், மூன்றாம் பரிசு ரூ 20,018 அதிரை WCC அணியினருக்கும், நான்காம் பரிசு ரூ 15,018 அதிரை KMC அணியினருக்கும் வழங்கபட்டது.
தொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இன்றைய இறுதி ஆட்டத்தையும், பரிசளிப்பு நிகழ்ச்சியையும் காண ஏராளமான கிரிக்கெட் பிரியர்கள் வருகைதந்து ரசித்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment