உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டை ஃபோபர்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பையில் 4 லட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்ட முகேஷ் அம்பானியின் “அன்டிலியா’ வீடு தான் உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பர வீடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அன்டிலியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு தெற்கு மும்பையில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.5,350 கோடியாகும். 27 மாடிகளைக் கொண்ட இந்த வீடு 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு சதுர மீட்டர் நிலத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் . இந்த வீட்டில், முழு நேர பணியாளர்களாக 600 பேர் பணிபுரிகின்றனர்.
நியூயார்க் நகரின் மான்ஹாட்டனில் ரூ. 200 கோடி மதிப்பில் 17 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட 7வது உலக வர்த்தக மையக் கட்டடத்துடன், முகேஷ் அம்பானியின் வீட்டை ஃபோபர்ஸ் பத்திரிகை ஒப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வீட்டில் தரைத் தளத்தில் 6 அடுக்குகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன.
இந்த வீட்டை பராமரிப்பதற்கு 600 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ஃபோபரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்ததாக பிரான்சில் உள்ள ‘வில்லா லியோ போல்டா’ என்ற கட்டடம், 2,709 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
லண்டனில் உள்ள ‘தி பென்ட் ஹவுஸ்’ எனப்படும் கட்டடம் 1,070 கோடி ரூபாய் மதிப்புடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
No comments:
Post a Comment