ADTயால் அறிவிக்கப்பட்டபடி வெள்ளிக்கிழமை மாலை (09.05.2014) பிலால் நகர் தர்பியா மையத்திலும் சனிக்கிழமை மாலை (10.05.2014) A L மெட்ரிக் பள்ளியிலும் நடந்த மந்திரமா? தந்திரமா? என்ற நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பும், இடையிடையேயும், முடிவாகவும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மக்களுக்கு விளக்கங்களை கூறி தெளிவுபடுத்தினார். நிகழ்ச்சி இறுதியிலும் பெண்கள் தாமாக முன்வந்து கேள்வி எழுப்பி தெளிவுபெற்றுச் சென்றது பெண்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது.
ஏமாற்றுப்பேர்வழிகளால் மந்திரம் என நம்பவைத்து மோசடி செய்யப்படும் அனைத்தும் தந்திரமே என நேரடி செயல்முறை விளக்கத்துடன் நிறுவி நிகழ்ச்சியை குழந்தைகளின் குதூகலத்துடன் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
ஜின் ஆபரேசன்
முன்னதாக, இன்று காலையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு 'இந்திய சுதந்திரப் போரில் முஸ்லீம்களின் வீர வரலாறு' எனும் தலைப்பின் கீழ் மறைக்கப்பட்ட வரலாற்றையும், வீர் சவர்க்கார் போன்ற தேசத்துரோகிகள் தியாகிகளாக போற்றப்படும் இழிவையும், வாஸ்கோட காமா என்ற வந்தேறி முஸ்லீம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு நடுக்கடலில் நிகழ்த்திய அட்டூழியங்களை பட்டியலிட்டும், வரலாற்று பக்கங்களில் மதச்சாயம் பூசி மறைக்கப்பட்டுள்ள, முஸ்லீம்கள் நம் தேச விடுதலைக்காக செய்த எண்ணிலடங்க தியாகங்களை மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமும் எடுத்துரைத்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை நடைபெறும் உளவியல் வகுப்பில் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் வழங்கப்படக்கூடும்.
களத்திலிருந்து அதிரை அமீன்
தகவல் : அதிரை அமீன்
தகவல் : அதிரை அமீன்
நன்றி: அதிரைநியூஸ்
No comments:
Post a Comment