அதிரை தக்வா பள்ளி அருகில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ], கடற்கரைத்தெரு அர்ரவ்லா பெண்கள் மகளிர் கல்லூரி, பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையும் ஏ எல் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றின் சார்பில் இன்று [ 17-05-2014 ] மாலை 5 மணியளவில் கோடைகால பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, செயலாளர் ஜமில் M. ஸாலிஹ், அதிரை அமீன், அஹமது ஹாஜா ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர சிறப்பு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவியரின் மார்க்க அறிவித்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்.
இதைதொடர்ந்து இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 'உளவியல் அறிஞர்' மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி 'குடும்ப பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாணவ மாணவிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment